கொளுத்தும் வெயில் காலையிலிருந்து நம்மை வாட்டியெடுக்க மாலையானால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சுடச்சுட நடந்து நம் இதயத்துடிப்பை எகிர வைத்துக் கொண்டிருக்கும் நாட்கள் இவை. விளையாட்டை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கிறது சூதாட்டம் ஊடகங்களின் துணையுடன். நேற்றைய போட்டியின் (சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இண்டியன்ஸ், தேதி : 14-May-2008) நடுவே எதேச்சையாக ஹலோ பண்பலை (Hello FM 106.40MHz) கேட்க நேர்ந்தபோது முற்றிலும் அதிர்ந்து போனேன். அந்த பண்பலை ஒலிபரப்பு நிகழ்ச்சியில் நடந்தது இது தான். ஒரு ஓவர் வீசப்படும் போது இந்த நிகழ்ச்சியில் மூன்று பேர் பங்கேற்கலாம். நேயர்கள் அந்த ஓவரில் எடுக்கப்படும் ஓட்டங்களைத் தொலைபேசி வாயிலாகக் குறிப்பிட வேண்டும். குறிப்பிடப்பட்ட ஓட்டங்கள் எடுக்கப்பட்டால், அந்த ஓவருக்காக நிர்ணயிக்கப்பட்ட பரிசுத்தொகை அந்த நேயருக்கு வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட பரிசுத்தொகையோ பத்தாயிரம் ரூபாய் வரை. இரு நேயர்கள் ஒரே அளவிலான ஓட்டங்களைக் குறிப்பிட்டால், பரிசுத்தொகை வழக்கம் போல் பகிர்ந்தளிக்கப்படும். போதாக்குறைக்கு, குறுந்தகவல் போட்டிக் கேள்விகள் வேறு. அதில் ஜெயித்தால் ஐந்தாயிரம் பரிசு.
20 - 20 போட்டிகள் அறிமுகப்படுத்தாததற்கு முன்பே கிரிக்கெட்டில் சூதாட்டம் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து, பின் அது நிரூபிக்கப்பட்டது. அதன் பிறகு 20 - 20 போட்டிகள் அறிமுகம். ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. போகப் போக இதுவும் மாறி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. முதலில் ஐ.சி.எல். குழு பின்பு ஐ.பி.எல். குழு என்று ஆரம்பித்தது. தற்போது ஐ.சி.எல். போய், ஐ.பி.எல். 20 - 20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதிலும் வீரர்களை ஏலத்தில் எடுத்தமைக்காக சூடான விவாதங்கள் ஒருபுறம் கிளம்பியது. இது இப்படியிருக்க, இந்த மீடியாக்களெல்லாம் மக்களின் கிரிக்கெட் ஜுரத்தைப் பயன்படுத்தி காசுபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாகப் பார்த்த காலங்கள் போய் தற்போது வேறுவிதமாக வடிவெடுத்து வருகிறதோ என்ற எண்ணம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
இப்படி மாறிவரும் போக்கு நல்லதா கெட்டதா என்ற கேள்விக்கு பதில்தான் இன்னும் கிடைத்தபாடில்லை. விளையாட்டு மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதைத்தான், "மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா" என்று அன்றே சொன்னான் பாரதி. இன்றைய குழந்தைகள் விளையாடச் செல்வதில்லை. கம்ப்யூட்டர் கேம்ஸ்சும், வீடியோ கேம்ஸ்சும் அவர்களின் கண்ணையும் கருத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன. இதைத் தவிர வெளியரங்குகளில் ஆடும் ஆட்டங்களுக்கான பயிற்சி வகுப்பில் பிள்ளைகளை சேர்த்து விட்டால்... அப்பப்பா!! அதைப்பற்றி எழுத ஒரு தனிப்பதிவே வேண்டும்.
கபடி, ஓட்டப்பந்தையம் போன்ற விளையாட்டுக்கள் எல்லாம் சரிவினைச் சந்தித்து வரும் இவ்வேளையில் நம் தேசிய விளையாட்டான ஹாக்கியும் தன் அடையாளத்தை இழந்துவருகிறது வேதனைக்குறிய விஷயம். எல்லா விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வளர்க்க வேண்டியது விளையாட்டு ஆர்வலர்களின் கைகளில் தான் உள்ளது. கிரிக்கெட் பார்ப்பது தற்போது ஃபேஷன் ஆகிவிட்டதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஒரு விளையாட்டு முறையாக வளர்ந்தால் தேவலாம். அதைவிடுத்து இப்படிப்பட்ட பகிரங்க சூதாட்டங்களுக்கு நடுவே வளர்ந்தால் நாளைய விளையாட்டு உலகத்தின் கதி???
ஆதங்கத்துடன்,
சகாராதென்றல்.

6 comments:
//கொளுத்தும் வெயில் காலையிலிருந்து நம்மை வாட்டியெடுக்க மாலையானால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சுடச்சுட நடந்து நம் இதயத்துடிப்பை எகிர வைத்துக் கொண்டிருக்கும் நாட்கள் இவை.//
இங்கேயும் கவிதையா?
//ன் (சென்னை சூப்பர் கிங்ஸ் Vs மும்பை இண்டியன்ஸ் தேதி : 14-May-2008) நடுவே எதேச்சையாக ஹலோ பண்பலை (Hello FM 106.40MHz) கேட்க நேர்ந்தபோது முற்றிலும் அதிர்ந்து போனேன்.//
உண்மைதான்.இது அப்பட்டமான சூதாட்ட நிழல்:)
//மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா" என்று அன்றே சொன்னார் பாரதி. இன்றைய குழந்தைகள் விளையாடச் செல்வதில்லை. கம்ப்யூட்டர் கேம்ஸ்சும், வீடியோ கேம்ஸ்சும் அவர்களின் கண்ணையும் கருத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன.//
அருமையா சொல்லியிருக்கிங்க:)
ஆரோக்கியம் கெடுவது மட்டுமின்றி,வீட்டிலேயே ஒதுங்கியிருப்பதால் மற்ற சிறுவர்களுடன் பழகி பகிர்ந்துக்கொள்ளும் சமுதாயத் தொடர்பு திறமை குறைந்துவிடுகிறதுன்னு ஆய்வுகள் சொல்கின்றன:)
//
கபடி, ஓட்டப்பந்தையம் போன்ற விளையாட்டுக்கள் எல்லாம் சரிவினைச் சந்தித்து வரும் இவ்வேளையில் நம் தேசிய விளையாட்டான ஹாக்கியும் தன் அடையாளத்தை இழந்துவருகிறது வேதனைக்குறிய விஷயம். எல்லா விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வளர்க்க வேண்டியது விளையாட்டு ஆர்வலர்களின் கைகளில் தான் உள்ளது. கிரிக்கெட் பார்ப்பது தற்போது ஃபேஷன் ஆகிவிட்டதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஒரு விளையாட்டு முறையாக வளர்ந்தால் தேவலாம். அதைவிடுத்து இப்படிப்பட்ட பகிரங்க சூதாட்டங்களுக்கு நடுவே வளர்ந்தால் நாளைய விளையாட்டு உலகத்தின் கதி???//
சமுகத்தைப்பற்றிய ஆரோக்கியமான உங்கள் விமர்சனங்களைப் பாராட்டுகிறேன்:) வாழ்த்துக்கள்:)
IPL கிரிக்கெட்டும் பற்றிய உங்கள் கருத்தில் முழு உடன்பாடு எனக்கு. நான் IPL கிர்க்கெட்யை பார்ப்பதே கிடையாது. இந்தியர்களின் சிந்தனையும் பணமும் நேரமும் இந்த அளவு இந்தியர்களாளே விண்ணடிக்கப்படுகிறது ஏமாற்றப்படுகிறது என்பதை நினைக்கும் போது வேதனையாய் இருக்கிறது...
நல்ல பதிவு...
தினேஷ்
தங்களின் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி ரசிகன், தினேஷ்
Post a Comment